அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்! தையிட்டி காணி உரிமைப் போராட்டம் தீவிரம்
மக்களின் நியாயமான போராட்ட முடக்கத்திற்காக காவல்துறையினர் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தப் பார்க்கிறார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரித்த அவர், “தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
நியாயமான போராட்டம்
மக்களின் நியாயமான போராட்ட முடக்கத்திற்காகப் காவல்துறையினர் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தப் பார்க்கிறார்கள்.
இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான 5 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இது வெறும் காணி உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, வடகிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இருப்பையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம்.
அரசினதும் காவல்துறையினருக்கும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது, எமது உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |