வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி

Jaffna Nainativu Nagapooshani Amman Temple
By Sumithiran Jun 26, 2025 09:57 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மனுக்கு இன்று பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது .

 இன்று நண்பகல் 12 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணில் அதிர அம்மனுக்கு கொடியேற்றம் பக்திபூர்வமாக நடைபெற்றது.

இதேவேளை நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக மாவட்ட செயலகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் 17.06.2025 ஆம் திகதி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட பின்வரும் விடயங்களை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களின் நலனுக்காக வெளியிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி | The Flag That Led Nain To Nagapoosani

 படகுச் சேவை

குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுச் சேவையானது 26.06.2025 ஆந் திகதி தொடக்கம் 11.07.2025 ஆந் திகதி வரை மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சேவையில் ஈடுபடும்.

பேருந்து சேவை

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தானது யாழ்.பேருந்து தரிப்பிடத்திலிருந்து மு.ப 5.30 மணி தொடக்கம் இறுதி படகுச் சேவைக்கமைய சேவையில் ஈடுபடுவதுடன், அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையிலும் சேவையில் ஈடுபடும்.

திருவிழா காலங்களில் பேருந்து 4.30 மணிக்கு பேருந்து தரிப்பிடத்திலிருந்து புறப்படும். அத்துடன் இரவு பேருந்து சேவையானது படகுச் சேவைக்கமைய சேவையில் ஈடுபடும்.

 குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியிலும் அதற்கு முன்னான வீதி ஓரங்களிலும் வாகனங்கள் தரிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அடியார்கள் மற்றும் பொதுமக்களை இறக்கிவிட்டு வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் தரிக்கப்படவேண்டும். இந் நடைமுறையினை கடைப்பிடிக்காதவர்கள் மீது பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 24.06.2025 ஆந் திகதி தொடக்கம் 12.07.2025 ஆந் திகதி வரை குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு கட்டட பொருட்கள் வங்களாவடி இறங்குதுறைக்கு கொண்டு செல்லப்படலாம். குறிகட்டுவானிலிருந்து பி.ப 2.00 மணிக்கு பின்னர் கட்டடப்பொருட்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன் இறுதி 04 திருவிழா காலங்களில் கட்டடப்பொருட்கள் எடுத்துச்செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

 அன்னதானம்

அடியார்களுக்கான மதிய மற்றும் இரவு உணவானது அமுதசுரபி அன்னதான சபையினரால் திருவிழா நாட்களில் வழங்கப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடு

காவல்துறையினர் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள். மேலும் பொதுமக்கள், அடியார்கள் தங்களது பெறுமதிமிக்க பொருட்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவர்.

தண்ணீர்ப்பந்தல்

ஆலய வளாகத்தில் தண்ணீர்ப்பந்தல் அமைக்க விரும்பும் அடியார்கள் மற்றும் பொதுநலன்விரும்பிகள் பொது சுகாதார பரிசோதகரை தொடர்புகொண்டு அனுமதியினைப் பெற்றுக்கொள்ளவும்.

திருவிழா காலங்களில் ஆலய வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை முற்றாக தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. ஆலயத்திற்கு முன்புறமாக உள்ள தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு பொருத்தமான இட ஒதுக்கீடு செய்யப்படும். 

யாழ். இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது

யாழ். இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025