உலகின் மிக ஏழ்மையான நாடுகள் இவை தான்.... அதற்கான காரணங்கள் இதோ!
தொழில்நுட்ப வளர்ச்சி, செல்வச்செழிப்பு, வானுயர்ந்த கட்டடங்கள் சொகுசு வீடு வாசல் என செல்வந்தர்களாக மக்கள் வாழ்ந்து வருகையிலே, ஒரு வேளை உணவு கூட இல்லாமல் கஷ்டப்படும் வறுமை நிறைந்த நாடுகளும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறது.
அந்த நாடுகள் கல்வியறிவின்மை, வறுமை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை, சட்டவிரோத செய்ற்பாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன, அப்படி வறுமை வாட்டியெடுக்கும், உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சர்வாதிகாரம், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறை ஆகியவை தலைவிரித்தாடும் காங்கோ உலகின் ஐந்தாவது ஏழை நாடாக இடம்பிடித்துள்ளது, நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் நிலையில் இந்த நாட்டில் ஒரு நாளைக்கு இரண்டு டொலர்களை கூட செலவு செய்ய முடியாமல் மக்கள் அல்லலுறுகின்றனர்.
சோமாலியா
நிலைமை இவ்வாறு இருக்கையில், நாடு முழுவதும் உறுதியற்ற தன்மை, இராணுவ கொடுங்கோன்மை மற்றும் கடற்கொள்ளையர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு உலகின் நான்காவது ஏழை நாடாக சோமாலியா விளங்குகின்றது, 1960 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற இந்த நாடு இன்றுவரை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகிறது, இந்த வறிய நாட்டின் மொத்த மக்கள் தொகை 1 கோடியே 26 லட்சம் ஆக காணப்படுகிறது.
இந்த வரிசையிலே அடுத்ததாக, மத்திய ஆப்பிரிக்க குடியரசு உலகின் மூன்றாவது ஏழ்மையான நாடாக இடம்பிடித்துள்ளது, தங்கம், எண்ணெய், யுரேனியம், வைரம் என பல மதிப்புமிக்க ரத்தினங்கள் இந்த நாட்டில் கொட்டியிருந்தாலும், இந்த நாடு வறுமையில் சிக்கித் தவிக்கிறது 55 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த நாடு, தன்னை வலுப்படுத்த இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறது.
புருண்டி நாடு
அடுத்து இடண்டாவது இடத்தை புருண்டி நாடு பிடித்திருக்கிறது, இந்த நாடு நீண்டகாலமாக உள்நாட்டுப் போரை சந்தித்து வருகிற அதேவேளை இங்கு 80 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர், தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக கூட புருண்டி நாடு இன்றும் போராட வேண்டியுள்ளது.
இவையெல்லாம் இப்படியிருக்க அண்மையில் 2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் உலகின் ஏழ்மையான நாடுகளில் தன்னிகரில்லா முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது, தெற்கு சூடானில் 11 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்கின்றனர்,எண்ணெய் வளம் அதிகம் உள்ள போதிலும், தெற்கு சூடான் அதன் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்தாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |