இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை : கணவர் விடுத்த வேண்டுகோள்
                                    
                    Missing Persons
                
                                                
                    Batticaloa
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மனைவியை காணவில்லையென அவரது கணவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
புதிய காத்தான்குடி 01 பதுரியா வீதியிலுள்ள அபுல் ஹசன் பாத்திமா சியாமா (வயது 30) என்பவரே காணாமற் போயுள்ளார்.
காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு
கடந்த 13ம் திகதி தனது மகளை பாலர் பாடசாலைக்கு கூட்டிச் சென்று அங்கு பிள்ளையை விட்டு விட்டு இது வரை வீடு வந்து சேரவில்லை என கணவர் அனஸ் என்பவர் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டால் அறிவிக்கவும்
இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மனைவி காணாமல் போன அன்றிலிருந்து இதுவரை தேடி வருவதாகவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என குறிப்பிடும் கணவர் இவரை கண்டால் 0774 529 655, 0729 663 170 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்