எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை: பிரபு எம்.பி சாடல்
நாட்டு மக்கள் எப்போதுமே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு இன்று (03.04.2026) விஜயம் செய்த அவர் களுதாவளையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த நிலையில் உதய கம்பன்பில அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குத தொடர்பான புத்தக வெளியீட்டு அண்மையிலே வெளியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார். கடந்த காலங்களில் சஜித் பிரேமதாச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களில் இரட்டை நிலைப்பாடுகளிலே இருந்ததை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது.
இந்த காலகட்டத்திலே முன்னாள் ஜனாதிபதிகளுடன் இணைந்து இந்த புத்தக வெளியீட்டிலே கலந்து கொண்டிருந்த விடயம் இப்போது மக்கள் மத்தியில் விமர்சனமாக முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அது ஒரு ஏ.ஐ தொழில்நுட்பத்தின் ஊடாக வந்த புகைப்படம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் என்னதான் குறிப்பிட்டிருந்தாலும் பொய்களை மறைக்க முடியாது உண்மைகள் வெளியில் வரும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்