கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி - விரைவில் கிடைக்கும் சீன-இந்திய ஒப்புதல் - அதிபர் ரணில்!
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Government Of India
Government of China
President of Sri lanka
By Pakirathan
இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களை விட தற்போது இலங்கை பொருளாதாரம் சரியான முறையில் கொண்டு செல்லப்படுவதாகவும், இதை நாம் முன்னெடுத்துள்ள செயல்பாடுகளின் மூலம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் நம்பிக்கை

தொடர்ந்து அவர், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய விடயங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இரு நாடுகளின் ஒப்புதல் கிடைக்கும் எனவும் இலங்கை அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி