2023 ல் கூகுளால் அதிகம் தேடப்பட்ட விடயங்களில் முதலிடத்தில் எது தெரியுமா!
இந்த ஆண்டு(2023) அதிகமாக தேடப்பட்ட விடயங்களை கூகுள்(google) வெளியிட்டுள்ளது.
கூகுள் வெளியிட்டுள்ள தகவல் படி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தேடப்பட்ட பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வருவதோடு இது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"ஹமாஸ் என்றால் என்ன," "இஸ்ரேலில் என்ன நடக்கிறது," மற்றும் "ஹமாஸ் தாக்குதல் ஏன்" என்பவற்றை அதிகமாக தேடியுள்ளனர்.
பொழுதுபோக்கு தேடல்
அதற்கு அடுத்த இடத்தில் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்று 5 பேருடன் மர்மமாகிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது.
அதனை தொடர்ந்து சிரியா மற்றும் துருக்கியில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் அதிகமாக தேடப்பட்டுள்ளது.
மேலும், "பார்பி" மற்றும் "ஓப்பன்ஹெய்மர்" ஆகிய படங்களும் இந்திய படங்களில் "ஜவான்" படம் அதிகமாக தேடப்பட்ட படங்கள் பட்டியலில் உள்ளது.
"ரிஸ்” (rizz) என்ற வார்த்தையை 2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவு செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |