யாழ். சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான போக்குவரத்து - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Jaffna Srilanka Bus Traffic Jam
By Thulsi Oct 06, 2026 08:14 AM GMT
Report

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை புதன் கிழமை (07.10.2026) முதல் 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், நாளை காலை 9 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமைபோன்று பாலத்தின் ஊடாக இடம்பெறும் என அறவிக்கப்பட்டுள்ளது

அதன் பின்னர் மாற்று வழித்தடத்தின் ஊடாக பேருந்து சேவைகள் தொடரும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சங்குப்பிட்டி பாலம் மூடப்படும் காலப்பகுதியில் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, பேருந்து சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

1.7 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

1.7 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

மாற்று வழித்தடம்

இதன்படி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து பூநகரி நோக்கி வரும் பேருந்துகள், பூநகரியிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தி, அதே வழித்தடத்தின் ஊடாக மீண்டும் பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான போக்குவரத்து - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Traffic Via Sanguppiddy Bridge Jaffna

மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக பேருந்துகளின் பயணத் தூரம் சுமார் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவை வழங்குநர்கள் சேவை நோக்குடன் மாற்று வழித்தடத்தில் பேருந்து சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

வவுனியாவில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

பேருந்துக் கட்டண உயர்வு

எனினும், அதிகரிக்கும் பயணத் தூரத்தை கருத்திற்கொண்டு, சிறிய அளவிலான பேருந்துக் கட்டண உயர்வு ஏற்படக்கூடும் எனவும், இதனை பயணிகள் கருத்திற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

யாழ். சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான போக்குவரத்து - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Traffic Via Sanguppiddy Bridge Jaffna

எனவே, நாளை முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சங்குப்பிட்டி பாலத்தைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழித்தடம் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பேருந்து சேவைகள் சீராக இடம்பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு!

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025