வெள்ளத்தில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழந்த துயரம்
Polonnaruwa
Elephant
Floods In Sri Lanka
By Jaso
பொலன்னறுவை மகாவலி வெள்ளப் பள்ளத்தாக்கின் ஹந்தபன்வில்லுவ பிரதேசத்தில் ஏழு யானைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏழு யானைகளில் இரண்டு குட்டிகளும் ஐந்து பெண் வயது வந்த யானைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக
தற்போது பெய்துவரும் மழையினால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேற்று நீரை பருகியுள்ளமையே
வெள்ளப் பெருக்கில் சிக்குண்ட யானைகள், சேற்று நீரை பருகியுள்ளமையே இந்த மரணங்களுக்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |