வவுனியாவில் வீட்டின் மீது வீழ்ந்த பாரிய மரத்தால் ஏற்பட்ட அனர்த்தம்
Vavuniya
Weather
Rain
By Independent Writer
Courtesy: kapil
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் மீது வீழ்ந்ததால் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பலத்த சேதமடைந்துள்ளது.
வவுனியாவின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பொழிந்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது.
வேரோடு சாய்ந்து வீழ்ந்த பாரிய மரம்
இந்நிலையில் சிதம்பரபுரம் பகுதியில் இன்று பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக, பாரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீடொன்றின் மீது வீழ்ந்தது. இதன்போது வீட்டில் இருந்த ஒருவர் காயங்களிற்குள்ளானார்.

குறித்த சம்பவத்தினால் வீட்டிற்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்