டொனால்ட் டிரம்பின் புதிய அறிவிப்பால் அதிரும் அமெரிக்கா
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் (Washington, D.C) இருந்து வீடற்ற மக்களை வெளியேற்றப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இதனை குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் வொஷிங்டனில் இருந்து வீடற்றவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு நகரின் வெளியே தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடற்றவர்களின் எண்ணிக்கை
800 க்கும் மேற்பட்டதேசிய காவல் படையினர் நூற்றுக்கணக்கானோரை வொஷிங்டனில் நிலைநிறுத்த அரசு தயாராகி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்பின் இந்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இதில் காவல் படையினரின் செயல் திட்டங்கள் மற்றும் எண்ணிக்கை ஆகியவை தற்போது தீர்மானிக்கப்பட்டு வருவதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் வீடற்றவர்களை வெளியேற்றுவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் எந்த சட்ட அதிகாரத்தை பயன்படுத்துவார் என்பதும் தெரியவில்லை.
வீடற்றவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 700000 பேர் வசிக்கும் தலைநகர் வொஷிங்டன் டி.சி-யில் ஒவ்வொரு இரவும் சுமார் 3,782 பேர் வீடற்றவர்களாக வெளியே தங்குவதாக வொஷிங்டனின் வீடற்றவர்கள் எண்ணிக்கையை குறைக்க உதவும் சமூக அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் டி.சி. வன்முறைக் கும்பல்கள், குற்றவாளிகள் மற்றும் வீடற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவர்களை தலைநகரில் இருந்து வெளியேற்றப் போவதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
