யாழில் மற்றுமொரு வாகன விபத்து! இருவர் பலி
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த கனரக வாகனம் (டிப்பர்) மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், கனரக வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்வாறு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |