வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!
Colombo
United Kingdom
Sri Lanka Police Investigation
By Laksi
பிரித்தானியாவில் இருந்து வந்த ஆணும் பெண்ணும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனனர்.
இதன்போது விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்
பல வருடங்களாக குறித்த வீட்டில் தாயும் மகனும் ஒன்றாக தங்கிருந்த நிலையில், அங்கிருந்த பொருட்களை களவாக விற்பனை செய்தமை தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் இந்த வீட்டில் இருந்த 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி