பின் வாங்கமாட்டேன் : பரஸ்பர வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் திட்டவட்டம்
உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கடுமையான வரிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நேற்றைய தினம் (06.04.2025) செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரிகள் விதிப்பதாக கூறி அத்தகைய நாடுகள் மீது ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான விதிகளை விதித்திருப்பது சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட கடுமையான வரி
இந்த நிலையில்,, உலக நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி குறித்து பேசிய ட்ரம்ப் “உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கடுமையான வரிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அதே சமயம் விற்பனையைப் பற்றியும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஐரோப்பா, ஆசியா என பல தலைவர்களிடம் நான் பேசினேன். அவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள நினைத்தார்கள்.
அவர்களது நாட்டுடன் எங்களுக்குப் பற்றாக்குறைகள் இருக்கப் போவதில்லை என்று நான் சொன்னேன். ஏனென்றால் எனக்குப் பற்றாக்குறை ஒரு இழப்பு” என்றார்.
இத்தாலி பிரதமர்
மேலும், வியட்நாம் ஆடை உற்பத்திக்கான முக்கிய மையமாகவும், வரி கொள்கை குறித்து அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் வியட்நாம் தலைவர் தொலைபேசியில் தன்னுடன் பேசியதாகவும், ''அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிந்தால், அவர்களின் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறோம்'' என அந்நாட்டு அதிபர் தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, ஐரோப்பாவில் முக்கிய நாடான இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ட்ரம்பின் நடவடிக்கையுடன் உடன்படவில்லை என்றும், ஆனால் "எங்கள் வணிகங்கள் மற்றும் எங்கள் துறைகளை ஆதரிக்க தேவையான அனைத்து பேச்சுவார்த்தையும், பொருளாதார ஒப்பந்தத்தையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
