ஈரானின் தலைவர்கள் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அமெரிக்கா!
சில ஈரானியத் தலைவர்கள் அமெரிக்காவிடம் பொய் சொல்லி, பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்ததால் தான் அவர்கள் இன்று பூமியில் இல்லை என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச முன்மொழிவை ஈரான் நிராகரித்ததை தொடர்ந்து அவரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானின் தனிப்பட்ட வாக்குறுதி
அதன்போது, “ஈரானின் முந்தைய தலைவர்களில் சிலர் இப்போது இந்தப் பூமியில் இல்லை, ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவிடம் பொய் சொல்லி, பேச்சுவார்த்தைகளில் எங்களை இழுத்தடித்தார்கள்.

Image Credit: Deacon Greg Kandra
அது ஜனாதிபதிக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அதனால்தான் அவர்களில் பலர் கொல்லப்பட்டனர்." என லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஒப்பந்தத்தைச் செயல்படுத்தத் திறனுள்ள நபர்களுடன்தான் ஒப்பந்தம் செய்கிறோம் என்பதை அமெரிக்கா எவ்வாறு உறுதி செய்யும்?" என்று கேட்கப்பட்டபோது, வொஷிங்டன் ஈரானின் தனிப்பட்ட வாக்குறுதிகளைச் சோதித்து, பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் என்று லீவிட் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ விளைவு
எனினும், அவர்கள் அவ்வாறு இல்லையென்றால், திரைக்குப் பின்னால் தாம் தனிப்பட்ட முறையில் கேட்கும் வார்த்தைகளுக்கு ஈரானிய ஆட்சி உண்மையாக இருக்காவிட்டால், அவர்கள் சந்திக்கப்போகும் இராணுவ விளைவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை என்று ஈரான் பகிரங்கமாகக் கூறிவந்தாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாதகமான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் லீவிட் மேலும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா "நாட்கள் செல்லச் செல்ல, பேரழிவை ஏற்படுத்தும் போர்த் திறனுடன் மிகவும் தீவிரமான, இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது" என்றும், அமெரிக்க நடவடிக்கைகள் "திட்டமிட்டபடி" நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்