இரவு வேளை வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த கும்பல்!
police
vavuniya
attack
investigation
By Kalaimathy
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைசேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றய தினம் இரவு 11 மணிளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கத்திகளுடன் புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்