வவுனியா அரச அதிபராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமனம்?
vavuniya
ga
appoinment
By Vanan
வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பௌத்த சாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன அண்மையில், வடமாகாண பிரதமசெயலாளராக பதவி உயர்வுபெற்றுச்சென்றிருந்தார்.
இதனையடுத்து கடந்த ஒரு மாத காலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், நாளையதினம் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி