நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு
திருத்தப்பணிகள் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (05) மாலை 6.00 மணி முதல் மறுநாள் புதன்கிழமை (06) காலை 6.00 மணி வரையான 12 மணிநேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கந்தானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர்வெட்டு
இதேவேளை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை (Trincomalee) கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 07.11.2024 ந் திகதி அன்று காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை குடி நீர் விநியோகத் துண்டிப்பு இடம் பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நீர் வெட்டானது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம்,கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதியிலும் இடம் பெறவுள்ளது.
இதனால் முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |