ஆட்டம் காட்டும் ஈரான்..! எகிறும் உலக உணவுப் பொருட்களின் விலைகள்
கடந்த மார்ச் மாதத்தில் உலக உணவுப் பொருட்களின் விலைகள் உச்சத்தை எட்டியுள்ளன.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் மற்றும் உரம்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி, உலக உணவு விலைச் சுட்டெண் பெப்ரவரி மாதத்தை விட 2.4% அதிகரித்துள்ளது.

அதன்படி, சீனி விலை 7.2% ஆகவும், தாவர எண்ணெய் விலை 5.1% ஆகவும் உயர்ந்துள்ளதுடன், கோதுமை விலையும் 4.3% ஆல் அதிகரித்துள்ளது.
இருப்பினும், அறுவடைக்காலம் மற்றும் இறக்குமதி கேள்வி குறைவடைந்ததன் காரணமாக அரிசி விலை 3.0% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் மோதல்கள் மேலும் 40 நாட்களுக்கு மேல் நீடித்தால், எரிபொருள் மற்றும் உரம் போன்ற உற்பத்திச் செலவுகள் உயர்மட்டத்தில் இருக்கும் என்பதால், விவசாயிகள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளைக் குறைக்க முற்படலாம் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்