உலகின் மிக வயதான நபர் காலமானார்!
உலகின் மிக வயதான நபர் இன்று காலமானார்.
அருட்சகோதரி லூசில் ரென்டன் என அறியப்பட்ட இக் கன்னியஸ்திரி தனது 118 ஆவது வயதில் நேற்று காலமாகியுள்ளார்.
இவர் பிரான்ஸின் டவ்லோன் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அருட்சகோதரி லூசில் ரென்டன்

உலகின் மிக வயதான மனிதராக இருந்த ஜப்பானியரான கேன் டனேகா சென்ற வருடம் தனது 119 ஆவது வயதில் காலமானதையடுத்து, கன்னியஸ்திரியான அருட்சகோதரி லூசில் ரென்டன் உலகின் மிக வயதான நபராக அடையாளம் காணப்பட்டார்.
உலகின் மிக வயதான நபராக இவரை கின்னஸ் சாதனை வெளியீட்டாளர்களும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான உடல் உழைப்பு மற்றும் அனைவரையும் கவனித்துக்கொள்வது, பராமரிப்பது போன்ற செயல்பாடுகளால் தான் நீண்டகாலம் உயிர் வாழ முடிவதாக சில வருடங்களுக்கு முன்பு அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.