பற்றி எரியும் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு இந்தியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் காயமடைந்த நிலையில் இரண்டு இந்தியர்கள் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பி சி ஆர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
பின்னர் அவர்கள் இருவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டனர்.எடுக்கப்பட்ட பி சி ஆரில் அவர்கள் இருவரில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.