ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை (Kalutara) குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாணந்துறை (Panadura) - வலபால பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேக நபர் டுபாயில் (Dubai) பதுங்கி இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் டுபாய் தரங்காவின் முக்கிய சகா என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை வலோபால பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |