மூதூரில் விபத்து : ஒருவர் பலி - மற்றுமொருவர் படுகாயம்
மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்றைய தினம் (08.08.2025) காலை இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக சிகிச்சை
விபத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
