அநுரவுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள அனோஜனின் மரண தண்டனை இரத்து விவகாரம்
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்த முடிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவேற்றுள்ளார்.
இது தொடர்பில் அவரது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'இந்த முடிவு, அனோஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கை ஆழ்ந்த கவலையுடன் கவனித்து வந்த இலங்கையர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பொறுமையான ராஜதந்திரம், ஒரு நட்பு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு மரியாதை அளித்தல், மற்றும் வெளிநாட்டில் உள்ள ஒரு இலங்கை குடிமகனுக்கு ஆதரவளித்தவர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த தீர்மானம் பிரதிபலிக்கிறது.
I welcome the decision by the Supreme Court of Saudi Arabia to set aside the death sentence imposed on Sri Lankan national Anojan Sivarasa. This brings immense relief to Anojan, his family, and all Sri Lankans who have followed his case with deep concern. It reflects the value of patient diplomacy, respect for the legal processes of a friendly nation, and the tireless work of those who stood by a Sri Lankan citizen abroad. I express my sincere appreciation to the Government of Saudi Arabia for this outcome. I also thank the many Saudi Arabian and Sri Lankan diplomats, civil servants and legal teams for their dedicated efforts. My Government will continue to extend all necessary support to Anojan and his family as the remaining legal processes conclude. No Sri Lankan who leaves our shores in search of a livelihood should ever feel that they stand alone.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) October 14, 2026
முயற்சிகளுக்கு நன்றி
மேலும், சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, சவதி அரேபிய மற்றும் இலங்கை தூதர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சட்டக் குழுக்களின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்கு நன்றி.

மீதமுள்ள சட்ட நடைமுறைகள் முடிவடையும் வரை, அனோஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்று அவர் உறுதியளித்ததுள்ளதோடு, "வாழ்வாதாரத்தைத் தேடி நமது கரைகளை விட்டு வெளியேறும் எந்தவொரு இலங்கையரும் தாங்கள் தனியாக நிற்பதாக ஒருபோதும் உணரக்கூடாது எனவும் பதிவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |