யோஷித ராஜபக்சவின் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்து உத்தரவிட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட சதிக்குற்றச்சாட்டுகளை மேற்கொண்டு விசாரணைக்குட்படுத்த முடியும் என கொழும்பு மேல்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி யோஷித ராஜபக்ச மறுசீராய்வு மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று (03-06-2026) குறித்த மனு விரிவாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அதற்கான திகதியை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதனடிப்படையில் யோஷித ராஜபக்சவின் மறுசீராய்வு மனு எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மனு பரிசீலிக்கப்பட்டபோது மனுதாரர் யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |