யாழில் வைத்தியசாலை பணியாளர் மீது சராமாரி தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
Law and Order
By Shalini Balachandran
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது இருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்று (31) நயினாதீவிலிருந்து படகில் குறிகட்டுவான் இறங்குதுறையில் வந்து இறங்கிய வேளை அங்கு காத்திருந்த இருவர் பணியாளர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் பார்த்திருக்க குறித்த இருவரும் பணியாளர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதல்
இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த பணியாளர் சிகிச்சைக்காக யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி