சிங்கள ஆயுதமாக மாறிய பிள்ளையான் : இன்னும் ஆயிரம் பேர் உருவாகும் அச்சம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலும் அதன் பின்னணியில் இருக்கும் உள்ளூர் அரசியல் தொடர்பாகவும் மிக நீண்ட காலமாக அரசல் புரசலாக சில விடயங்கள் பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஈஸ்டர் கொலை ஆவணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கொலையுண்டவர்களுக்கும் அவர்களின் உறவுகளுக்குமான நீதிகோரலின் பரிமாணம் சர்வதேச விசாரணையைக் கோருகின்ற அளவுக்கு மாறியிருக்கின்றது.
- நீண்ட கால நீதி கோரலை மேற்கொண்டிருக்கும் தமிழினம் இதனை எப்படிப் பார்க்க வேண்டும்?
- தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்?
- இந்த கொலைக்களத்தின் பிரதான சூத்திரதாரி என அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் ராஐபக்ச அதிகார வர்க்கத்தின் பின்புலம் என்ன?
- அதன் ஏவலாளர்களான பிள்ளையான், சுரேஸ் சாலே போன்றவர்களின் மீதான பார்வையை நாம் எப்படி முன்வைக்கவேண்டும்?
- இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கை இப்போது தமிழ் பயங்கரவாதமாக மடைமாற்றம் செய்யப்படுகிறதா?
போன்ற கேள்விகளுக்கான விரிவான பதில்களை மிக நீண்ட கால ஆய்வுத்தளத்தில் பயணிப்பவர்களான நிராஜ் டேவிட் மற்றும் சிவகுரு பிறேம் ஆகியோர் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கியிருந்தனர்.
இதன்போது, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஐ் மற்றும் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களின் படுகொலைகளின் மீதான நமது பார்வை மற்றும் அதனை எப்படி நகர்த்திச்செல்லவேண்டும் என்பது பற்றியும் சிங்கள அரச நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிய பிள்ளையான் போன்ற இன்னும் ஆயிரம் பிள்ளையான்கள் உருவாகக்கூடும் என்ற அச்சத்தையும் அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ளமுடியும் என பல தளங்களில் இதன்போது கருத்துகள் பகிரப்பட்டன.