கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஹர்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை
ஒரு நாடாக இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் உரையாற்றுகையில்,
கடன் மறுசீரமைப்பு
“கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமையை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு மிகவும் கடினமான பயணத்திற்கு தயாராக வேண்டும்.
நாடு மீண்டும் பழைய பாதையை பின்பற்றினால், நாடு மிகவும் துயரமான தலைவிதியை சந்திக்க நேரிடும்.
தனக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்லலாம், ஆனால் பொதுவாக ஒரு நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை முறியடிக்க வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |