உர மானியத் தொகை தொடர்பில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு
இந்த முறை, உர மானியத் தொகை விவசாயிகளின் கணக்குகளில் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி இரண்டு ஹெக்டேருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பருவத்திற்கு சுமார் எண்பதாயிரம் மெட்ரிக் தொன் யூரியா தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்
சிறுபோகத்திற்கான உரத்தை வழங்குவதற்காக,கமநலசேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என்று விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவிக்கிறது.

சிறுபோகத்திற்காக நெல் சாகுபடி தொடங்கியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் பணிகளை முறையாக மேற்கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கமநல சேவை நிலையங்கள் அனைத்து விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் திறந்திருக்கும் என்று அதன் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |