யாழில் விசமிகளால் வைக்கப்பட்ட தீ: தடைப்பட்ட பருத்தித்துறை - மருதங்கேணி போக்குவரத்து
Sri Lankan Tamils
Jaffna
By Erimalai
யாழ். வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கும் வலிக்கண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பருத்தித்துறை பிரதேச சபையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் விசமிகளால் சம்புப் புல் தரவைக்கு தீவைக்கப்படட நிலையில் அது பாரிய தீயாகப்பரவி ஏற்பட்ட புகையால் வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
வரட்சியான காலத்தில் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் இவ்வாறு தொடர்ச்சியாக தீப்பரவல் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்