இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் கோபால் பாக்லே : வெளியானது விசேட அறிக்கை

Sri Lanka High Commission of India Colombo Australia Gopal Baglay India
By Sathangani Dec 18, 2023 07:34 AM GMT
Report

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த கோபால் பாக்லேவின் பதவிக்காலம் 2023 டிசம்பர் 15ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் நியமனம் பெற்றுச் செல்வதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை உறவு

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாக, ”2020 மே மாதம் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் இந்தியாவின் உயர் மட்ட இராஜதந்திரியாக அவர் பதவி வகித்த காலப்பகுதி இருதரப்பு பங்குடமையில் ஒப்பிட முடியாத பல மைல்கற்களை கண்டிருந்தது.

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் கோபால் பாக்லே : வெளியானது விசேட அறிக்கை | Gopal Bagle Bids Farewell To Sri Lanka

காரைநகர் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது


இந்திய இலங்கை உறவுகளில் பல்வேறு உயர் சாதனைகளை எட்டுவதிலும் அவர் மிகமுக்கியமான வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.

அவரது பதவிக் காலத்தின் போது 2022 இல் இலங்கை பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டிருந்த நிலையில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பன்முக உதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்.

ரொறன்ரோவில் வாடகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ரொறன்ரோவில் வாடகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கைக்கான மனிதாபிமான உதவி

மேலும் கொவிட் 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் இலங்கைக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களின் விநியோகத்தினை துரிதப்படுத்துவதற்காக இந்திய கடற்படை மற்றும் விமானப்படை கலங்கள் பணிக்கமர்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.” எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் கோபால் பாக்லே : வெளியானது விசேட அறிக்கை | Gopal Bagle Bids Farewell To Sri Lanka

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க் ஆகியவற்றுக்கான இந்திய தூதுவராக தற்போது கடமையாற்றி வரும் திரு சந்தோஷ் ஜா இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமையேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

காவல்துறைமா அதிபரின் சேவைக்காலம் தொடர்பில் வெளியான தகவல்

காவல்துறைமா அதிபரின் சேவைக்காலம் தொடர்பில் வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்