ஐ.பி.எல் ஏல வரலாற்றில் அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக சாம் கரன் சாதனை!
Cricket
TATA IPL
IPL 2022
IPL 2023
By Pakirathan
ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியன் பிரீமியம் லீக் ஆட்டங்களுக்கான வீரர்களின் ஏலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் வீரர்களை ஏலம் எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் ஐ பி எல் வரலாற்றில் அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாம் கரன் பெற்றுள்ளார்.
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்

இந்தியன் பிரீமியம் லீக் ஏல வரலாற்றில் அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சாம் கரன் பெற்றுள்ளார்.
இவரை இந்திய மதிப்பில் 18.50 கோடி ரூபாவிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
இதன்மூலம், இதுவரை நடந்த ஐ பி எல் போட்டிகளிற்கான ஏல வரலாற்றில் அதிகூடிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாம் கரன் பெற்றுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி