இஷாரா செவ்வந்தியின் காதலர்...! ஆட்டம் காண வைக்கும் பெண்: அவிழும் முடிச்சுகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் வெளியாகும் தகவல்கள் இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அதுமட்டுமின்றி, இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு தப்பியோட உதவியது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் என்ற விடயம் வடக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் கலாச்சார சீரழிவு மற்று போதைப்பொருள் பாவனை தலைவிரித்தாடும் இந்த வேளை இலங்கையில் முக்கிய பாதாள உலக கும்பலுடன் அவர்கள் நெருங்கிய உறவை பேணியது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா கூறியுள்ளார்.
"எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்" என்று 'பத்மே' தன்னிடம் கூறியதாகவும், அதன்படி சமிந்து தில்ஷானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, கொலையைச் செய்யுமாறு தான் அவரைத் தூண்டியதாகவும் இஷாரா செவ்வந்தி அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
