யாழில் மீண்டும் கொரோனா மரணம்!
corona
jaffna
death
By Kalaimathy
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு முதியவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்று மாலை இடம்பெற்றதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு, வீரபத்திரர் ஆலயத்திற்கு அண்மையில் வசிக்கும் 77 வயதுடைய கே.இராசலிங்கம் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 03ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 05ஆம் திகதி கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை இதயப் பாதிப்பு தொடர்பிலான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்