யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

Sri Lankan Tamils University of Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Theepan Jul 10, 2026 02:14 PM GMT
Report

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

தொடரப்பட்டுள்ள வழக்கு

இந்நிலையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு | Jaffna Uni Faculty Of Arts Fomer Dean Court Case

அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் அதில் 14 பேர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்

குறித்த 14 பேரில், சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக், பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு | Jaffna Uni Faculty Of Arts Fomer Dean Court Case

சம்பந்தப்பட்ட வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை இன்றையதினம் வெள்ளிக்கிழமைக்கு திகதிக்கு மன்று திகதியிட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எவ்வித கட்டளைகளும் வழங்கப்படாது, வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! விசாரணையை தொடங்கியது முக்கிய நிறுவனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! விசாரணையை தொடங்கியது முக்கிய நிறுவனம்

அடுத்த கட்டத்தில் யோஷித மீதான ஊழல் வழக்கு! முன்னாள் காதலியின் முழுமையான வாக்குமூலம்!

அடுத்த கட்டத்தில் யோஷித மீதான ஊழல் வழக்கு! முன்னாள் காதலியின் முழுமையான வாக்குமூலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026