இணையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - கஞ்சன விஜேசேகர
தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மேலும் கூறுகையில்,
'பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் ஊடக நிறுவனம்
இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பான பொய்யான செய்திகளை வெளியிட்டதன் மூலம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை உள்ளடக்கிய உள்ளூர் ஊடக நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
பல இணையத்தளங்கள், சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்வதாகவும் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/08889ee9-d1f9-4a71-9e51-898e82dd112a/23-6475bce274889.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/aed1c67a-7dc2-4d1e-b417-537506a641ba/23-6475bce2c0dfc.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)