கிளிநொச்சியில் ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்!
கிளிநொச்சி ஊடகவியலாளர் த.பரமசிவன் (சிவா) என்பவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவரே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட எவரது பெயர்களையும் குறிப்பிடாது முகநூலில் சட்டவிரோத செயற்பாடுகளை விமர்சித்து ஊடகவியலாளர் சிவா பதிவிட்ட பதிவு ஒன்றின் பொருட்டு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த அச்சம்
இந்தநிலையில், ஊடகவியலாளரைத் தொடர்புகொண்ட குறித்த நபர், “உனக்கு பிள்ளைகள், குடும்பம் உண்டு ஆனால் நான் எதனையும் பார்க்க மாட்டேன், உன்னைக் கொல்லுவேன்.
உனது மண்டையைப் பிளப்பேன், இன்றைக்கு அல்லது நாளைக்குள் உனக்கு அடிப்பேன்.

மரியாதை போய்விட்டால் ஒருவன் எதனையும் பார்க்கமாட்டான்” என மிகக் கடுமையான உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊடகவியலாளரின் குடும்பம் மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதுடன் குறித்த ஊடகவியலாளர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |