வெளிநாட்டில் உள்ள மனைவியை அழைத்து வர போதிய பணம் இல்லாததால் கணவன் உயிர் மாய்ப்பு
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை சிறிலங்காவுக்கு அழைத்து வர போதிய பணம் இல்லாததால் மனம் உடைந்த ஐந்து பிள்ளைகளின் தந்தை கிராமத்தில் உள்ள ஓயாவில் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில், தங்காலை - மாத்தர பகுதியைச் சேர்ந்த ஹேவகே பியதிலக என்ற 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவியான நிலானி மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத் சென்றுள்ளார்.
மரணத்திற்கான காரணம்
அவர் பல வீடுகளில் வேலை செய்தாலும், அந்த வீடுகளில் வேலை செய்வது கடினம் என்று தொழில் வழங்கிய வீட்டு உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, மனைவியை சிறிலங்காவிற்கு அழைத்து வர அவரது கணவர் முயற்சித்ததாகவும், ஆனால் முகவர் நிறுவனம் 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கணவர், வீட்டுக் காணியை அடமானம் வைத்து, கடன் வாங்க முயன்றும் தோல்வியடைந்துள்ளார்.
இதனால் தந்தை மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அவரின் மகள்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இந்நிலையில், நேற்று பிற்பகல் தங்காலை வீரகட்டிய வீதியில் தங்கெட்டிய பிரதேசத்தில் கிரம ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து குதித்து தனது உயிரரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதன்படி, மீட்கப்பட்டவரின் சடலம் தமது தந்தையுடையது என மகள்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து காவல்துறையினரால் மேலதிக விசாரணைக் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |