யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Court of Appeal of Sri Lanka
By Kajinthan Jul 28, 2026 01:14 PM GMT
Report

மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினாவுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

செம்மணி மனித புதைகுழி குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி - நீதி அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி - நீதி அமைச்சர்

காவல்துறை பாதுகாப்பு

முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப் பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு | Mandaitivu Mass Grave Case Postponed

பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின் போது வழக்காளிகளின் சார்பில் ன சட்டத்தரணிகளால் குறித்த விடயம் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று, கிராம சேவகர், பிரதேச செயலர், பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி, காவல்துறையினர், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான நிதி திரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.

யாழ். நாவற்குழி பகுதியில் கோர விபத்து - குடும்பஸ்தர் பலி

யாழ். நாவற்குழி பகுதியில் கோர விபத்து - குடும்பஸ்தர் பலி

நீதிமன்றத்தில் விசாரணை

முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு | Mandaitivu Mass Grave Case Postponed

முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை

தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016