மன்னார் நகர சபை விவகாரம் குறித்து நீதிமன்றின் உத்தரவு
மன்னார் நகர சபை விவகாரத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் முறைப்படி மீளப்பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆளுநரின் விசாரணைக்கு எதிராக தவிசாளரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (02.06.2026) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் இந்த எழுத்தாணை முறையீடு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தவிசாளருக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி
இதன்போது, ஆளுநர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஜனந்தன், தவிசாளருக்கு எதிராக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தவறுகள் இருந்ததை நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

அந்த வர்த்தமானியையும் விசாரணை அறிவித்தலையும் ஆளுநர் கைவிடுவதாக அறிவித்ததை அடுத்து, நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
முன்னதாக, தவிசாளருக்கு எதிராக விசாரணை நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், இந்த இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது. தவிசாளர் தரப்பில் மூத்த சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |