மருத்துவர்களை கைவிட்ட அநுர அரசின் பட்ஜெட்
ஜனாதிபதி அநுரவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், மருத்துவர்களைப் புறக்கணித்து அவர்களின் வசதிகளைக் குறைத்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
வருமான வரி காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் மருத்துவர்களுக்கு இந்த பட்ஜெட்டிலும் கூட நிவாரணம் வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என்றும் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு வரி இல்லாத வாகன உரிமங்கள்
மருத்துவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் பிற வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசியல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போல் மருத்துவர்களுக்கு வரி இல்லாத வாகன உரிமங்கள் அல்லது போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மருத்துவர்களுக்கு குடியிருப்பு வசதிகள்
மருத்துவர்களுக்கு போதுமான அதிகாரபூர்வ குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் அரசாங்கம் அவசர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |