இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

Sri Lanka Tourism Economy of Sri Lanka Dollars CBSL
By Sathangani Feb 28, 2026 05:46 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம், சுற்றுலாத்துறை வருமானம் ஆகியவற்றின் வளர்ச்சியால் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீத பாரிய வளர்ச்சியாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 378 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புதல் : பிரதமரின் அறிவிப்பு

பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புதல் : பிரதமரின் அறிவிப்பு

வாகன இறக்குமதி

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு ஜனவரி இறுதியில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ள நிலையில் சீனாவுடனான பரஸ்பர பறிமாற்றல் வசதியும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் | Millions Of Usd Received By Sri Lanka From Abroad

இறக்குமதியை விட ஏற்றுமதியின் வளர்ச்சி அதிகமாக இருந்ததால், வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. எனினும், ஏற்றுமதி விலைகளை விட இறக்குமதி விலைகள் வேகமாக உயர்ந்ததால் 'வர்த்தக விதிமுறைகள்' சற்றே சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 2026 ஜனவரியில் வாகன இறக்குமதிக்காக 224 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இது டிசம்பர் மாதத்துடன் (301 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் குறைவானதாகும்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கொழும்பு பங்குச் சந்தை

அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் 17 மில்லியன் டொலர் முதலீடு உள்ளீர்க்கப்பட்ட நிலையில், கொழும்பு பங்குச் சந்தையிலிருந்து 22 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன.

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் | Millions Of Usd Received By Sri Lanka From Abroad

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 0.2 சதவீதத்தால் வலுவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025