அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்: தொடரும் பதற்றம்
சிரியாவில் 2 அமெரிக்கா ராணுவத்தளங்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் (ட்ரோன் )நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளதுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ பயிற்சி தளங்களில் ஒன்று சிரியாவின் தெற்கு பகுதியிலும் இன்னொன்று வடகிழக்கு பகுதிலும் அமைந்துள்ளது.
ஆளில்லா விமானங்கள்
இந்த பயிற்சி தளத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக போராட அந்த நாட்டின் படைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்நிலையில் நேற்று(19) 3 ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு மற்ற விமான தாக்குதலில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி ராணுவ தளங்களில்
மேலும் இந்த தகவலை அமெரிக்கா அதிகாரிகளே உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் இந்த தாக்குதலில் எந்தவிதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. மேலும் இதுவரையிலும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.
இஸ்ரேல் ஹமாஸ் போர் நடுவே அன்மையில் நடந்த காசா மருத்துவமனை மீதான தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈராக்கில் உள்ள அதன் கூட்டணி ராணுவ தளங்களில், ஆளில்லா விமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.