யாழில் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதி - ஜனாதிபதிக்கு பறந்த கோரிக்கை
யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபான நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயம் தற்போது பெரும் பேசுபொருளாகி உள்ளதுடன் யாழில் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில்நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரி கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என ரஜீவன் எம்.பி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள்
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த அனுமதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் அவை விசாரிக்கப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, யாழ்ப்பாண மக்களின் நலன்களையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |