கைது செய்யப்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை
புதிய இணைப்பு
கைதுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆரச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற கார் விபத்து சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு அமைய இந்த உத்தராவது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபருக்கு , ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை அத்துருகிரிய காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |