பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட CCIB! வெளியானது வர்த்தமானி
கொழும்பில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக் காவல் இடமாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
2026 ஒக்டோபர் 6ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2509/11 ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இலக்கம் 48 of 1979 இன் 9ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை
வர்த்தமானி அறிவிப்பு
இதன்படி, கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தின் 7ஆம் மாடியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் வளாகம், தடுப்புக் காவல் இடமாக நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி இந்த அறிவிப்பில் கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி PTA சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்களை குறிப்பிட்ட இடத்தில் தடுத்து வைப்பதற்கான சட்டபூர்வ அடிப்படையை இந்த வர்த்தமானி அறிவிப்பு ஏற்படுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |