அநுரவின் யாழ். விஜயம்: தென்னிலங்கை மேலாதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட சவாலா...!
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, கலாசார ரீதியாக வடபுல மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயல்வது இங்கு வெளிப்படுகின்றது.
ஜனாதிபதியின் வடக்கு நோக்கிய இணக்கப்பாட்டு நகர்வுகள் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான மென்போக்கு, தென்னிலங்கை பௌத்த மேலாதிக்க சக்திகளிடையே சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் காணி விடுவிப்பு போன்ற நீண்டகால அரசியல் கோரிக்கைகளுக்குப் புதிய அரசு எத்தகைய தீர்வை முன்வைக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு வடக்கில் மேலோங்கியுள்ளது.
இந்தநிலையில், ஒருபுறம் பௌத்த துறவிகளின் விமர்சனங்கள் மற்றும் மறுபுறம் அடிப்படை உரிமைகளை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள் என இரு முனைகளிலும் ஜனாதிபதி, அரசியல் ரீதியான அழுத்தங்களைச் சந்திக்க நேரிட்டுள்ளது.
இந்த விஜயம் வெறும் சடங்கு ரீதியான பயணமாக அமையுமா அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நோக்கிய நகர்வா என்பது தொடர்பிலும் மற்றும் அண்மைய அரசியல் களம் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |