பெங்களூரு அணியை
நடப்பு ஐ.பி.எல் (2026) தொடரில் இன்று இடம்பெற்றுவரும் 34ஆவது போட்டியில், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி, குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
இரவு 7.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்றியில் வென்ற பெங்களூர் அணி முதலில் கலத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இதன்படி தற்போது துடுப்பெடுத்தாடிவரும் குஜராத் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுள்ளது. இதுவரை அந்த அணி விக்கட் இழப்பின்றி 78 ஓட்டங்களை 8 ஒவரட நிறைவில் பெற்றுள்ளது.
தலா 3 வெற்றிகள்
கடந்த போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவிய பெங்களூர் அணி, அந்த சரிவிலிருந்து மீண்டு சொந்த மண்ணில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது .
மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணியும் வெற்றியை நோக்கித் தீவிரமாக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடந்த ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்று சமபலத்துடன் விளங்குகின்றன.
புள்ளிப்பட்டியலில் முன்னேற இன்றைய வெற்றி இரு அணிகளுக்கும் மிக அவசியமானது என்பதால், இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்