காரை பராமரிப்பதற்குக் கூட பணமில்லை: கஷ்டத்தில் வாழ்வதாக கூறுகிறார் சனத் நிஷாந்த
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
அமைச்சர்களுக்கான போதியளவு வசதிகள் இல்லை என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமைச்சர்களின் உத்தியோகபூர்வ காரைப் பராமரிப்பதற்குக் கூட அமைச்சுக்களில் பணமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்களின் அர்ப்பணிப்பு
மேலும் அவர், கடந்த அரசாங்கங்களின் போது அமைச்சர்களுக்கு சலுகைகள் இருந்ததாகவும், ஆனால் தற்போதைய அமைச்சர்கள் மிகவும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் தாம் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இந்த நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் அந்த கஷ்டங்களை தாங்குவேன் என்றும் தற்போதைய அமைச்சர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்