பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் -கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்

srilanka school student education ministry
By Jaso Apr 18, 2021 05:23 PM GMT
Report

 ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், அரச மற்றும் தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அமைவாக ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த எண்ணிக்கை அல்லது அதற்குக் குறைவான மாணவர்களை கொண்ட வகுப்புக்களில் உள்ள மாணவர்களை நாளாந்தம் பாடசாலைக்கு அனுமதிக்க முடியும் என்று தெரிவித்த செயலாளர்,30 மாணவர்களைக்கொண்ட வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர் மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டாக பிரித்து அதாவது 15 மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார்.

30 மாணவர்களுக்கும் அதிகமானால் அந்த வகுப்பு மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து பாடசாலைக்கு அனுமதிப்பது கட்டாயமாகும். சுகாதார விதிமுறைகளை பேணி பாடசாலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (19) ஆரம்பமாகவுள்ளன.

தொழில்நுட்ப பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.

அறிவியல், மொழி மற்றும் புவியியல் பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் முகாமைத்துவ பீடத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த பீடங்களின் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்தினம் விடுதிகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் உதய ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016